பொதுவாக மாணவர்களை நீதிக் கதைகள் படி என்றால், அது பெரியவர்களுக்கானது என்று எண்ணுவார்கள். பேராசிரியர் ச. மாடசாமி அவர்கள் எழுதிய 'வித்தியாசம்தான் அழகு' நூல் மாணவர்கள் வாசிக்கும் ஆர்வத்தை தூண்டும் வண்ணம் எழுதப்படுள்ளது. மாணவர்களை அவர்களுக்குரிய நிறை குறைகளோடு சேர்த்து பரிவோடு அணுக வேண்டும் என பெரியவர்களுக்கும் எடுத்துச் சொல்கிறது. பேராசிரியர் ச. மாடசாமி அவர்கள் சக மனிதர்களை பாகுபாடின்றி நேசிக்கும் எளிய மக்களுக்காகவும், வகுப்பறைகளை அன்பின் மையங்களாக்கும் ஆசிரியர்களுக்காகவும் தொடர்ந்து எழுதி வருகிறார்.