சமூக பொருளாதாரக் காரணங்களால், தங்கள் கல்வியைத் தொடரமுடியாமல் தவிக்கிறார்கள் பலர். தகுதியும் திறமையும் வாய்ந்த மாணவர்களுக்கும். தரமான கல்விக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க அகரம் தன் பங்கிற்கான முயற்சியைச் செய்து வருகிறது.
ஆயிரக்கணக்கான கரங்கள் உதவி கேட்டு உயரும்போது, அதில் முன்வரிசையில் இருப்பவர்களின் கரங்களுக்கு மட்டுமோ அல்லது ஆங்காங்கே சில கரங்களை மட்டுமோ பார்த்து உதவுவது சரியான முறையல்ல. யாருக்கு உதவி மிகவும் தேவை என தேர்வு செய்ய வேண்டும். அகரம் பவுண்டேஷனின் விதைத் திட்டத்தில் தன்னலமற்ற தன்னார்வலர்கள் பங்கேற்கும் கச்சிதமான தேர்வுமுறை வடிவமைக்கப்பட்டுள்ளது.
வெயில், மழை பாராமல் தமிழ்நாட்டின் குறுக்கும் நெடுக்குமாய் பயணித்து உதவி தேவைப்படும் மாணவர்களை கண்டறியும் அகரம் தன்னார்வலர்களின் கள அனுபவங்கள் நம்பிக்கை ஒளியை விதைக்கிறது.